வாஷிங்டன்: உலகின் மிக பிரபலமான காணொலி பகிர்வு செயலியான டிக்-டாக்க்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தடை விதித்தார்.
இந்தத் தடையை நீக்க வலியுறுத்தி, அந்நிறுவனத்தின் நிறுவனர் பைதான் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், டிக்- டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.
முன்னதாக டொனால்ட் ட்ரம்ப், டிக் டாக் செயலிக்கு தடை விதித்த நிலையில் தனது பயனர்களை டிக் டாக் கண்காணிக்க வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்திருந்தார். இதற்கிடையில் அமெரிக்காவில் பொதுத்தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. டொனால்ட் ட்ரம்ப் தோல்வியை கண்டுள்ளார். இதனால் அவரின் தாக்கம் அமெரிக்காவில் குறைந்துவருகிறது.
இந்நிலையில் டிக் டாக் நிறுவனத்துக்கு தடை விதிக்கப்பட்ட விவகாரத்தில், முதன்மை நீதிமன்றம் தலையிட வேண்டும் என அச்செயலியின் நிறுவனர் பைதான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதையும் படிங்க:டிக்டாக் மாற்று: சில் செய்ய உதவும் Chill 5!