தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

நிறவெறிக்கு எதிராக வெள்ளை மாளிகை அருகே போராட்டம் - அமெரிக்க நிறவெறிக்கு எதிரான போராட்டம் 2020

வாஷிங்டன் : நிறவெறிக்கு எதிராக வெள்ளை மாளிகை அருகே நேற்று ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

white house
white house

By

Published : Jun 7, 2020, 11:47 AM IST

Updated : Jun 7, 2020, 12:20 PM IST

அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற 40 வயது ஆப்ரிக்க அமெரிக்கர், காவல் துறையின் கோரப் பிடியில் சிக்கி சாலையிலேயே உயிரிழந்த சம்பவம் அந்நாட்டையே உலுக்கிவருகிறது.

ஜார்ஜின் மரணத்துக்கு நீதி கோரியும், நிறவெறிக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பியும் ஆயிரக்கணக்கான மக்கள், அமெரிக்க பெருநகரங்களில் கடந்த ஒரு வாரமாகத் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், தலைநகர் வாஷிங்டனில் அமைந்துள்ள வெள்ளை மாளிகை (அதிபர் அலுவலகம்) அருகே நேற்று (சனிக்கிழமை) ஆயிரக்கணக்கானோர் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நார்த் கரோலினாவில் ஜார்ஜ் ஃப்ளாய்டின் இறுதிச் சடங்குகள் நடைபெற்று வந்த வேளையில், இந்தப் போராட்டம் அரங்கேறியது.

இந்தப் போராட்டத்தால் வாஷிங்டனில் பல்வேறு பகுதிகளுக்குச் சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இதையும் படிங்க : 'கேரள வனத்துறை மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு ஆதாரமற்றது'

Last Updated : Jun 7, 2020, 12:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details