பெண்களுக்கான உரிமைகளை வலியுறுத்தியும் டிரம்ப்பின் கொள்கைகளுக்கு எதிராகவும் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் போராட்டம் நடத்தப்பட்டது. வெள்ளை மாளிகைக்கு அருகே நடைபெற்ற இந்தப் பேரணியில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
இந்தப் பேரணி அமைப்பாளர் கூறுகையில், "வன்முறையற்ற எதிர்ப்பை வெளிப்படுத்தி சுயநிர்ணய உரிமை, கண்ணியம், மரியாதை ஆகியவற்றை பெண்களுக்குத் தரும் ஆதிக்கமில்லாத சமூகத்தை உருவாக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்" என்று கூறினார்
இந்தப் பேரணியில் சிலி நாட்டைச் சேர்ந்த பெண்கள் குழுவும் தங்கள் பாடல்களைப் பாடினர். இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற ஒருவர் கூறுகையில், "இன்று நாங்கள் வெறுப்பை வெளிப்படுத்தவில்லை; அன்பை வெளிப்படுத்துகிறோம். பெண்கள்தான் இந்த நாட்டின் ஆன்மா. அன்பு எப்போதும் வெறுப்புணர்வை வெல்லும்" என்றார்.