சூரியன், சந்திரன், பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும்போது கிரகணங்கள் நடைபெறுகின்றன. இதில், சூரிய கிரகணம் என்பது பூமிக்கும் சூரியனுக்கும் இடையே சந்திரன் வரும்போது, சூரியனின் ஒளிக்கதிர்களை மறைக்கும் அரிய நிகழ்வாகும்.
இந்நிகழ்வு ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு முறைகள் நடைபெறுகின்றன. இந்த அறிய நிகழ்வானது நேற்று அரங்கேறியது.
அதிலும், தென் அமெரிக்க நாடுகளான சிலி, அர்ஜெண்டினாவில் அரிதிலும் அரிதான முழு சூரிய கிரகணம் ஏற்பட்டது. சூரியனைச் சந்திரன் முழுமையாக மறைப்பதே முழு சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது.
முழு சூரிய கிரகணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சிலியின் லா செரினா நகரில் மாலை 4.38 மணிக்கும், அர்ஜெண்டினாவின் புவெனஸ் ஐரிஸ் நகரில் 4.44 மணிக்கும் இந்த கிரகணம் காணப்பட்டது. சூரியனைச் சந்திரன் முழுமையாக மூடிக்கொண்ட காட்சி பார்ப்போர் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.