அமெரிக்காவின் அடுத்த அதிபராக, ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரது பதவியேற்பு விழா ஜனவரி 20ஆம் தேதி நடைபெறுகிறது. தற்போதைய அதிபரான டொனால்ட் ட்ரம்ப், தேர்தலில் தனது தோல்வியை ஏற்றுக்கொள்ளாமல் முறைகேடு நடந்துவிட்டதாக குற்றஞ்சாட்டினார்.
அத்துடன் அவரது ஆதரவாளர்கள் ஜனவரி 6ஆம் தேதி அமெரிக்க நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து சூறையாடினர். இது அந்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் பெரும் கலக்கத்தையும் ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்திற்குப் பின்னால் ட்ரம்பின் தூண்டுதல் உள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், 20ஆம் தேதி நடைபெறவுள்ள பதவியேற்பு விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
ஏற்கனவே நிகழ்ந்தது போல ஊடுருவல் நிகழாமல் தடுக்க அனைத்து முக்கிய இடங்களிலும் தடுப்பு வேலி அமைக்கப்பட்டு பாதுகாப்பு படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர். அத்துடன் முக்கிய நினைவு சின்னங்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:ஐந்தே நாளில் கட்டப்பட்ட மருத்துவமனை - துரித செயல்பாடுகளில் சீன அரசு!