தென் அமெரிக்க கண்டத்தில் வடமேற்கு முனையில் உள்ள குடியரசு நாடு ஈகுவடார். இங்கு பொருளாதார சரிவு ஏற்பட்டதால்,அதனை ஈடுகட்ட பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொட்களுக்கு வழங்கப்பட்ட மானியத்தொகை வழங்கப்பட மாட்டாது என கடந்த 3ஆம் தேதி அந்நாட்டு அதிபர் லெனின் மொரேனோ அறிவித்தார்.
இதனையடுத்து, இந்த அறிவிப்பைத் திரும்ப பெறுமாறு மக்கள் சாலையில் வந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் இன்று நடந்த போராட்டத்தில் 7 பேர் உயிரிழந்ததாகவும், ஆயிரத்து 340 பேர் படுகாயமடைந்ததாகவும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதனிடையே உயிரிழந்த 7 பேரும் போராட்டத்தின்போது நெரிசலில் சிக்கி இறந்திருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.