தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

'பெரிய டீல் குறித்து பிறகு பார்த்துக்கொள்ளலாம்' - ட்ரம்ப் திட்டவட்டம் - trump trade deal

வாஷிங்டன்: இந்தியா - அமெரிக்கா இடையே பெரியளவிலான வர்த்தக ஒப்பந்தம் தற்போதைக்கு கையெழுத்தாக வாய்ப்பில்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

trump, ட்ரம்ப்
trump

By

Published : Feb 19, 2020, 11:18 AM IST

இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டிருந்த காணொளி ஒன்றில் பேசியுள்ள ட்ரம்ப், "இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தமிட அமெரிக்கா தயாராக உள்ளது. ஆனால், தற்போதைக்கு பெரியளவிலான ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பில்லை.

அதுகுறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. வரும் அதிபர் தேர்தலுக்குள் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகலாம். கண்டிப்பாக இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். இந்தியா எங்களைச் சரியாக உபசரிக்கவில்லை. ஆனால், பிரதமர் நரேந்திர மோடியை எனக்கு ரொம்ப பிடிக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வரும் 24ஆம் தேதி இரண்டு நாள் சுற்றுப் பயணமாக இந்தியா வருகிறார். அதிபரான பிறகு ட்ரம்ப் இந்தியா வருவது இதுவே முதல்முறையாகும். இந்தப் பயணத்தின் போது, இருநாடுகளுக்கும் இடையே சிறியளவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : கொரோனா பீதி: ரஷ்யாவுக்குள் நுழைய சீனர்களுக்குத் தடை

ABOUT THE AUTHOR

...view details