நியூ யார்க் டைம்ஸில் வெளியான செய்தி:
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நெருங்கிய வட்டத்தோடு தொடர்பில் இருந்த சிஐஏ-ன் (அமெரிக்க உளவுத் துறை) தகவலாளி (Informer) ஒருவர், ரஷ்யா அரசின் உயர்மட்ட முடிகள் குறித்து பல தகவல்களை தெரிந்து வைத்திருந்தார். 2016ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், ரஷ்யாவினரின் குறுக்கீடு இருக்கவேண்டும் என ரஷ்ய அதிபர் புடின் தனிப்பட்ட முறையில் விரும்பியதாக, அந்த தகவலாளி( Informer) தெரிவித்துள்ளார்.
அந்த தகவலாளி குறித்து சிஐஏ இயக்குநர் ஜான் பிரன்னான், முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்குக் கூட தெரியமால் ரகசியமாக வைத்துள்ளார்.
மேலும், அத்தகவலாளி கொடுத்த தகவல்கள் அப்போது (2016-ல்) சர்ச்சைக்குரியதாக இருந்ததால் சிஐஏ உயர் அலுவலர்கள், அவர் அளித்த தகவல்களை முழுவதையும் மறு ஆய்வு செய்தனர்.
2016ஆம் ஆண்டு அமெரிக்க தேர்தலில் ரஷ்ய தலையீட்டின் தீவிரம் குறித்து நுண்ணறிவு அலுவலர்கள் வழக்கத்துக்கு மாறான தகவல்களை வெளிப்படுத்தினர். இதுதொடர்பாக சிஐஏ தகவல்களை வைத்து ஊடகங்கள் செய்தி வெளிடத் தொடங்கின. இதனால், அமெரிக்க தகவலாளியின்(Informer) பாதுகாப்பு கருதி, அவரை ரஷ்யாவிலிருந்து அமெரிக்காவுக்கு தப்பிக்க வைக்க சிஐஏ முயன்றது. முதல் முயற்சி தோல்வியில் முடியவே, பல்வேறு தடைகளை மீறி இரண்டாவது முறையாக 2017ஆம் ஆண்டு வெற்றிகரமாக சிஐஏ, அவரை தப்பிக்க வைத்தது.
இதோடுமட்டும் நிறுத்தவில்லை, 2018ஆம் ஆண்டு அமெரிக்க இடைத்தேர்தலில் ரஷ்யா தலையீடு செய்ததா என சிஐஏ தீவிரமாக ஆய்வு செய்தது.
அமெரிக்கா அதிபர் டிரம்ப் தலைமையிலான அரசு ரகசிய தகவல்களை சரியாக கையாளவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவி வரும் நிலையில், அமெரிக்காவின் உளவுத்துறை அமைப்பான சிஐஏ, ரஷ்யாவில் இருந்த தகவலாளியை தப்பிக்கவைத்துள்ளதாக சிஎன்என் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது .
அமெரிக்க தேர்தலில் ரஷ்ய தலையீடு குறித்து சிறப்பு வழக்கறிஞர் முல்லர் விசாரணை மேற்கொண்டார். விசாரணையின் முடிவுகள் கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. அதில், ட்ரம்ப்புக்கும் ரஷ்யாவின் தேர்தல் தலையீடுக்கும் எந்த சம்பந்தமும் இருப்பதாக போதிய ஆதாரம் இல்லை எனக் கூறப்பட்டுள்ளது.