தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

தகுதியின் அடிப்படையில் ஹெச்1-பி விசா வழங்குங்கள்: ட்ரம்ப் உத்தரவு - தகுதியின் அடிப்படையில் ஹெச்1-பி விசா ட்ரம்ப் உத்தரவு

வாஷிங்டன் : ஹெச்1-பி விசாவில் சீர்திருத்தம் கொண்டுவந்து, தகுதியின் அடிப்படையில் விசா வழங்குமாறு அமெரிக்க அந்நாட்டு அலுவலர்களுக்கு அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

trump h1b visa
trump h1b visa

By

Published : Jun 23, 2020, 11:14 AM IST

இதுகுறித்து வெளியான வெள்ளை மாளிகை அறிக்கையில், "அமெரிக்கர்களின் வேலையைப் பாதுகாக்கத் தகுதியின் அடிப்படையில் விசா வழங்க ட்ரம்ப் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

ஆகையால், இனி ஹெச்1-பி விசா வழங்கலில் அதிக சம்பளம் பெறும் ஊழியர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும். குறைந்த சம்பளத்துக்கு அந்நிய நாட்டவரை வேலைக்கு எடுக்க வழிவகை செய்த சட்ட ஓட்டைகளை அடைக்கவும் அரசு முடிவெடுத்துள்ளது.

இந்தத் சீர்திருத்தங்கள் அமெரிக்கர்களின் வேலையையும், அவர்களுக்கு நியாயமான சம்பளம் கிடைப்பதையும் உறுதி செய்யும்" எனக் கூறப்பட்டுள்ளது.

வெள்ளை மாளிகையில் பணிபுரியும் மூத்த அலுவலர் ஒருவர் கூறுகையில், "ஒவ்வொரு ஆண்டும் 85 ஆயிரம் பேருக்கு ஹெச்1-பி விசா வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டில் இரண்டு லட்சத்து 25 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இதுவரை அவற்றை லாட்டரி முறையில் தான் நாங்கள் தேர்ந்தெடுத்து வந்தோம்.

ஆனால், அதிக சம்பளம் வாங்கும் முதல் 85 ஆயிரம் பேரை வரிசைப்படுத்தி அவர்களுக்கு விசா வழங்குமாறு ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். இது ஹெச்1-பி விசாவின் தரத்தை உயர்த்தும்" என்றார்.

முன்னதாக, ஹெச்1-பி விசா வழங்கலை தற்காலிமாக நிறுத்திவைப்பதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்திருந்த நிலையில், இந்த அறிவிப்பானது வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : 'உச்ச நீதிமன்ற கட்டளைகளை அரசு பின்பற்ற வேண்டும்'- மு.க. ஸ்டாலின் அறிக்கை!

ABOUT THE AUTHOR

...view details