தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

சீனாவுக்கு செக் வைக்க குவாட் உச்சி மாநாடு!

டோக்கியோ: குவாட் அமைப்பின் உச்சி மாநாடு இந்த மாத மத்தியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

குவாட்
குவாட்

By

Published : Mar 7, 2021, 6:11 PM IST

அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, இந்தியா ஆகியவை உறுப்பு நாடுகளாக அங்கம் வகிக்கும் குவாட் அமைப்பின் தலைவர்கள் கூட்டம் இந்த மாத மத்தியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் ஜப்பான் பிரதமர் சுகா, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன், பிரதமர் மோடி ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2004ஆம் ஆண்டு, இந்திய பெருங்கடலில் ஏற்பட்ட பூகம்பம், சுனாமி ஆகியவற்றை எதிர்கொள்ளும் நோக்கில் உருவாக்கப்பட்ட குவாட் அமைப்பு, தற்போது பிராந்திய பாதுகாப்பில் கவனம் செலுத்திவருகிறது. முன்னதாக, பிப்ரவரி மாதம், மோடியிடம் பேசிய பைடன், குவாட் அமைப்பின் மூலம் வலுவான பிராந்திய கட்டமைப்பை உருவாக்க அமெரிக்க தலைவர்கள் முயற்சி செய்துவருவதாக தெரிவித்திருந்தார்.

கிழக்கு மற்றும் தெற்கு சீன கடலில் சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு குவாட் அமைப்பு உறுப்பு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கடந்த மாதம் கண்டனம் தெரிவித்திருந்தனர். மேலும், சுதந்திரமான இந்தோ பசிபிக் பிராந்தியத்தை கட்டமைப்பதில் ஒற்றுமையுடன் செயல்பட நான்கு அமைச்சர்களும் ஒப்புதல் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details