கடந்த 2007ஆம் ஆண்டு, ராணுவ உறவை மேம்படுத்தும் வகையில், ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய நாடுகள் இணைந்து குவாட் என்ற அமைப்பை உருவாக்கின. கடந்த சில ஆண்டுகளாகவே சீனாவின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இந்நிலையில், அதற்கு செக் வைக்கும் வகையில் குவாட் கூட்டத்தை நடத்த உறுப்பு நாடுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுவருகின்றன.
அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பைடன், இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் குவாட் கூட்டணியை மீண்டும் மீட்டெடுக்க ஆவலுடன் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் கூறுகையில், "இப்பிராந்தியத்தில் குவாட் கூட்டணியின் அடித்தளத்தில்தான் அமெரிக்காவின் கொள்கையை கட்டமைக்கப்படவுள்ளது" என்றார்.