சீனாவுக்கு உட்பட்ட தன்னாட்சி பகுதியான ஹாங்காங்கில் இயங்கும் ஆப்பிள் டெய்லி என்ற செய்தித்தாளின் நிறுவனர் ஜிம்மி லாய் என்பவர் வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து செயல்படுவதாக் குற்றஞ்சாட்டிய காவல் துறையினர், தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவரை கைது செய்தனர்.
இந்த கைதுக்கு அமெரிக்க வெளியுறவுத் துறை செயலர் மைக் பாம்பியோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டரில், "ஹாங்காங்கின் தேசிய பாதுகாப்பு சட்டம் நீதியை கேலிக்குள்ளாக்கும் வகையில் உள்ளது.
ஜிம்மி லாய் செய்த ஒரே "குற்றம்" சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வாதிகாரம் பற்றி உண்மையை பேசியது. அவர் மீதான குற்றச்சாட்டுகளை உடனடியாக திரும்பப் பெற்று, அவரை விடுவிக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
சீனாவின் ஆளுகைக்குட்பட்ட பகுதியாக இருந்தாலும், ஹாங்காங் நீண்ட காலமாகவே தன்னாட்சி பிரதேசமாக செயல்பட்டுவந்தது. இந்தச் சூழ்நிலையில், தேசிய பாதுகாப்பு சட்டத்தை சீனா நிறைவேற்றியது. இது கடந்த ஜூலை 1ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது. இருப்பினும், இச்சட்டம் ஹாங்காங்கின் சுயாட்சியை பறிக்கும் வகையில் உள்ளதாகக் கூறி ஹாங்காங் முழுவதும் போராட்டம் நடைபெற்றது.
இதையும் படிங்க: மருத்துவ உலகில் அமெரிக்கா பெரும் சாதனை படைத்துள்ளது- ட்ரம்ப்