தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஈரான் விவகாரம்: சவுதி, ஐக்கிய அமீரகம் நாடுகளுக்கு அமெரிக்க அமைச்சர் பயணம் - அமெரிக்கா

வாஷிங்டன்: அமெரிக்கா-ஈரான் மோதல் குறித்து ஆலோசிப்பதற்கு அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கேல் பாம்பியோ சவுதி, ஐக்கிய அமீரகம் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

pompeo

By

Published : Jun 24, 2019, 7:49 AM IST

ஈரான் அணு சக்தி ஒப்பந்த விவகாரத்தில் அமெரிக்கா-ஈரான் இடையேயான மோதல் வலுத்துவருகிறது.

கடந்த வாரம், அமெரிக்காவின் ஆளில்லா விமானம் ஒன்றை ஈரானின் புரட்சிகர ராணுவப் படை சுட்டுவீழ்த்தியது. இதனால், இருநாடுகளுக்கும் இடையேயான மோதல் வலுத்துவருகிறது.

இதன் காரணமாக, மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையே பதற்றம் நீடித்துவருகிறது.

இந்நிலையில், இது குறித்து ஆலோசிப்பதற்காக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கேல் பாம்பியோ மத்திய சவுதி, ஐக்கிய அமீரகம் ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இது குறித்து அமெரிக்க உயர் அலுவலர் ஒருவர் தெரிவிக்கையில், ஈரானுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயாராக உள்ளோம். தற்போதுள்ள சூழ்நிலையில் எங்களுடன் அவர்கள் (ஈரான்) பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என நம்புகிறோம். அவர்கள் தயார் என்றால் பேச்சுவார்த்தையைத் தொடங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்" எனத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details