நியூயார்க்:ஒவ்வொரு ஆண்டும், உலகின் செல்வாக்கு மிகுந்த 100 பேரின் பட்டியலை டைம் இதழ் வெளியிட்டு வருகிறது. வாசகர்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் இந்த 100 பேர் கொண்ட பட்டியல் வெளியிடப்படுகிறது.
அதன்படி 2021ஆம் ஆண்டுக்கான உலகின் நூறு செல்வாக்கு மிக்கோர் பட்டியலை டைம் இதழ் வெளியிட்டுள்ளது. இதில், பிரதமர் மோடி மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
மோடி குறித்து இந்த இதழில், "சுதந்திர இந்தியாவில் நேரு, இந்திராவுக்கு அடுத்தபடியாக செல்வாக்குமிக்க தலைவரா மோடி உருவெடுத்துள்ளார். ஆனால், இவர், இந்தியாவை மதச்சார்பின்மை நாடு என்பதிலிருந்து இந்து தேசிய நாடு என்ற நிலையை நோக்கி நகர்த்தியுள்ளார்" என குறிப்பிடப்பட்டுள்ளது.