தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

அமெரிக்கா நகர் பகுதியில் விழுந்த விமானம் - பலர் உயிரிழந்துள்ளதாக தகவல்..! - அமெரிக்காவில் விமான விபத்து

அமெரிக்கா நாட்டின் விக்டோரியா நகரில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் பலர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Plane crash
Plane crash

By

Published : Aug 8, 2021, 12:48 PM IST

அமெரிக்கா: மினசோட்டா மாநில விக்டோரியா நகரில், மூனி எம் 20 சிங்கிள் இன்ஜின் விமானம், ஆளில்லா வீட்டில் விழுந்து விபத்துக்குள்ளானதில், அருகே குடியிருந்த பலர் உயிரிழந்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து சிபிஎஸ்என் மினசோட்டா ஊடகத்தில், இந்த சம்பவம் இந்திய நேரப்படி நேற்று( ஆகஸ்ட் 7 ) இரவு 11. 40 மணியளவில் நடந்துள்ளது. விபத்துக்குள்ளான விமானம் அலெக்ஸாண்ட்ரியா விமான நிலையத்தில் இருந்து ஈடன் ப்ரேரியில் உள்ள ஃப்ளையிங் கிளவுட் விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தது.

பாதிக்கப்பட்டவர்களின் சரியான எண்ணிக்கை இன்னும் தெரியவில்லை. தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம், மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் இந்த சம்பவம் குறித்து விசாரணையை தொடங்கியுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: விநாயகர் கோயில் மீது தாக்குதல்- பாகிஸ்தான் கண்டனம்!

ABOUT THE AUTHOR

...view details