அர்ஜென்டினாவின் தென் பகுதியான படாகோனியா பகுதியிலுள்ள ஏரி ஒன்று, அடர் பிங்க் நிறத்தில் மாறியிருப்பது, மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஏரியானது, ட்ரெலு (Trelew) நகரத்திலிருந்து 30 கிமீ தொலைவில் உள்ளது.
தொழிற்சாலைகளின் ரசாயன கழிவுகள் ஏரியில் கலப்பதால் தான் நிறமாற்றம் ஏற்பட்டுள்ளதாகச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
ஆண்ட்டி பாக்டீரியல் தன்மை கொண்ட சோடியம் சல்ஃபைட் என்ற ரசாயனம் நீரில் கலந்ததால், இப்படி அடர் பிங்க் நிறத்தில் நீரின் நிறம் மாறியிருப்பதாகக் கூறப்படுகிறது.