மேக்ஸ் வெரென்கா(13) என்ற சிறுவன் பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள கிரிப்ஃபின் ஏரியில் படகு பயணம் மேற்கொண்டுள்ளான். அப்போது தண்ணீருக்கடியில் ஒரு கார் மூழ்கிக் கிடப்பதை தனது கேமரா உதவியுடன் அச்சிறுவன் படம்பிடித்துள்ளான். அவனது இந்த செயல், 27 ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருந்த ஒரு வழக்கை தீர்க்க உதவப்போகிறது என்பது அன்று அவனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
நீருக்கடியில் எடுக்கப்பட்ட புகைப்படம் உடனடியாக சிறுவன் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்க, அங்கு வந்த போலீசாருக்கு நீருக்குள் கார் மூழ்கியிருப்பது தெரியவில்லை. உடனே தண்ணீருக்குள் குதித்த சிறுவன் மேக்ஸ், தண்ணீருக்குள் புகைப்படம் எடுக்கும் தனது கேமராவால் அந்த காரை புகைப்படம் எடுத்து கரைக்கு வந்து காவல் துறையிடம் காண்பித்திருக்கிறான்.
உடனே காவல் துறையினர் ஆழ்கடல் நீச்சல் வீரர்களை ஏற்பாடு செய்ய, இறுதியாக கருப்பு நிற ஹோண்டா அக்கார்டு கார் ஒன்றை தண்ணீருக்குள்ளிருந்து அவர்கள் மீட்டனர். அந்த காருக்குள் ஒரு பெண்ணின் உடல் இருப்பது தெரியவந்தது..
இதற்கிடையே 1992ஆம் ஆண்டு, ஜானட் ஃபாரிஸ் என்ற 70 வயது பெண்மணி ஆல்பர்ட்டாவில் நடந்த திருமணம் ஒன்றிற்காக காரில் சென்றிருக்கிறார். பின்னர் அவர் வீடு திரும்பவே இல்லை. அவரது மகனான ஜார்ஜ் இதுகுறித்து காவல் துறையிடம் புகாரளிக்க, எவ்வளவு தேடியும் ஜானட்டையோ அவரது காரையோ கண்டுபிடிக்க முடியவில்லை.
கார் விபத்தில் உயிரிழந்த ஜானட் ஃபார்ரிஸ் அன்று காருடன் காணாமல் போன ஜானட்தான் தற்போது மீட்கப்பட்டுள்ள காருக்குள் சடலமாக இருந்துள்ளார். ஜானட்டின் மகனான ஜார்ஜ்(62), தனது தாய் இறந்து போனது வருத்தத்திற்குரிய விஷயம்தான் என்றாலும், அவர் என்ன ஆனார் என்றே தெரியாமல் இருந்ததற்கு, அவரது உடலாவது கிடைத்துள்ளது சற்று ஆறுதலை அளிப்பதாக தெரிவித்திருக்கிறார்.
நீருக்கடியில் மூழ்கிய கார் மீட்பு தூக்கக் கலக்கத்திலோ அல்லது எதிரே வந்த வாகனம் மீது மோதாமல் தவிர்ப்பதற்காகவோ காரை திருப்பியபோது, கட்டுப்பாட்டை இழந்து கார் சாலையிலிருந்து விலகி ஏரிக்குள் விழுந்து மூழ்கியிருக்கலாம் என்று எண்ணுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
நீரில் மூழ்கிய ஹோண்டா அக்கார்டு கார் இதற்கிடையில் மேக்ஸின் தாயாகிய நான்சி வெரென்கா, தனது மகனின் இந்தச் செயல் தங்களுக்கு பெருமையை ஏற்படுத்தியுள்ளது என்று கூறியிருக்கிறார்.