ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா தனது ராணுவத்தினரை முழுமையாக ஆகஸ்ட் மாதம் திரும்பப்பெற்றது. இந்தப் படை வெளியேற்ற நடவடிக்கை நடைபெற்றுக்கொண்டிருக்கும்போதே தாலிபான் ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றியது.
ஆகஸ்ட் மாதத்தின் மத்தியில் தலைநகர் காபூலை கைப்பற்றிய தாலிபான், விமான நிலையத்தையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது.
இதன் காரணமாக ஆகஸ்ட் மாதம் முழுவதும் காபூல் நகர் வன்முறை பூமியாகக் காட்சியளித்தது. தாலிபானுடன் ஐ.எஸ். அமைப்பின் பயங்கரவாதிகளும் காபூலில் தாக்குதல் மேற்கொண்டதாகச் செய்திகள் வெளிவந்தன.
இதையடுத்து, காபூல் விமான நிலையத்தின் அருகே இருந்த குடியிருப்புப் பகுதியில் நின்றிருந்த கார் ஒன்றைக் குறிவைத்து அமெரிக்க ராணுவம் ட்ரோன் மூலம் வான்வழித் தாக்குதல் நடத்தியது.