பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு, பிப்ரவரி 14ஆம் தேதி, நடத்திய புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து, பயங்கரவாதிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாகிஸ்தானுக்கு உலக நாடுகள் கொடுத்து வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக, பயங்கரவாதிகளுக்கு எதிராக உறுதியான, நிரந்தரமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியா-அமெரிக்கா கூட்டறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்திய வெளியுறவுத் துறை செயலர் விஜெய் கோக்கேல், அமெரிக்க தேசிய பாதுகாப்பு அலோசகர் ஜான் போல்டன் இடையே அந்நாட்டு தலைநகர் வாஷிங்டனின் நேற்று நடந்த சந்திப்பை அடுத்து, இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுயுள்ளதாவது:
இருநாட்டு பிரமுகர்களுக்கும் இடையே நடைபெற்ற சந்திப்பில், பாகிஸ்தான் நாட்டில் செயல்பட்டுவரும் பயங்கரவாத அமைப்புகள் மீது அந்நாடு உறுதியான, நிரந்தமான நடவடிக்கை எடுக்க வேண்டியது, அவர்களுக்கு தஞ்சம் அளிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டது.
பின்னர், இதுகுறித்து ஜான் போல்டன் டிவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது, " இந்திய வெளியுறுத் துறை செயலர் விஜெய் கோக்கேலை சந்தித்தேன்... பயங்கரவாதத்துற்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தில் அமெரிக்கா எப்போதும் தோலாடு தோல் நிர்க்கும் மீண்டும் உரைத்தேன்' என்றார்.
இதற்கிடையே, ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அஸாரை சர்வதேச தீவிரவாதியாக அறிக்க வேண்டும் என்று ஐநா சபையில் அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகள் வலுயுறுத்தியிருந்தன. அதற்கு நேற்று சீன அரசு முட்டுக்கட்டை போட்டுள்ளதென்பது கவனிக்கத்தக்கது.