தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

கரோனாவால் வறுமைக்கு உள்ளாகும் 15 கோடி மக்கள் : உலக வங்கி - உலக வங்கித் தலைவர் டேவிட் மல்பாஸ்

கோவிட்-19 முடக்கம் காரணமாக ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகள், சுமார் 15 கோடி மக்களை அதீத வறுமைக்குள்ளாக்கும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.

World Bank
World Bank

By

Published : Oct 7, 2020, 5:38 PM IST

கோவிட்-19 காரணமாக சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து உலக வங்கி ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. உலக அளவில் கோவிட்-19 காரணமாக 8 முதல் 11 கோடி பேர் கூடுதலாக வறுமையின் பிடியில் சிக்கியுள்ளனர். 2017ஆம் ஆண்டு நிலவரப்படி உலக அளவில் 9.2 கோடி பேர் வறுமைக் கோட்டின் கீழ் இருந்தனர். இந்த எண்ணிக்கை 7.9 விழுக்காடாகக் குறையும் என முன்னதாக எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், தற்போது கோவிட்-19 பரவல் காரணமாக 1.4 விழுக்காட்டினர் அதீத வறுமைக்கு உள்ளாவார்கள் என உலக வங்கித் தலைவர் டேவிட் மல்பாஸ் தெரிவித்துள்ளார். இதையடுத்து அதீத வறுமையின் பிடியில் இருக்கும் மக்களின் எண்ணிக்கை சுமார் 11 கோடியாக உயரும் எனவும் உலக வங்கி எச்சரித்துள்ளது. இதில் 82 விழுக்காட்டினர் வளரும் நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள் எனவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.

இதுவரை உலக அளவில் மூன்று கோடியே 60 லட்சத்து 44 ஆயிரத்து 735 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு லட்சத்து 15 ஆயிரத்து 822 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க:2020 வேதியலுக்கான நோபல் பரிசை வென்ற இரு பெண் விஞ்ஞானிகள்!

ABOUT THE AUTHOR

...view details