தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

மீண்டும் தொடங்கும் அமெரிக்கா, வட கொரியா இடையிலான பேச்சுவார்த்தை! - அமெரிக்காவுக்கும், வட கொரியாவுக்கும் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை

தென் கொரிய உளவு அமைப்பானது அமெரிக்கா, வட கொரியாவுக்கு இடையிலான அணுசக்தி குறித்த பேச்சுவார்த்தை இன்னும் சில வாரங்களில் மீண்டும் தொடங்கும் எனத் தெரிவித்ததுள்ளது.

பேச்சுவார்த்தை குறித்த பேச்சுவார்தை மீண்டும் தொடங்கும்

By

Published : Sep 25, 2019, 10:09 AM IST

Updated : Sep 25, 2019, 10:25 AM IST


தென் கொரிய நாடாளுமன்ற உறுப்பினரான கிம்-மின்-கி, இதுகுறித்து கூறுகையில்; அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன்னை மீண்டும் சந்தித்து பேசுவதற்கு வாய்ப்புள்ளது என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக தென் கொரியா அரசுக்கு உளவுத் துறையும் விளக்கமளித்ததாகத் தெரிகிறது.

மீண்டும் தொடங்க இருக்கும் அமெரிக்க - வடகொரியப் பேச்சுவார்த்தை

மேலும் அமெரிக்காவுக்கும், வட கொரியாவுக்கும் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை இன்னும் சில வாரங்களுக்குள் தொடங்கும் என்று உளவுத் துறை அதிகாரிகள் சொன்னதாக கிம்-மின்-கி கூறினார்.

முன்னதாக வட கொரியா கடந்த ஆண்டு தொடக்கத்தில் அணு ஆயுதங்களைக் கைவிடுவதாக அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து தென்கொரிய நாடாளுமன்ற உறுப்பினரின் கருத்தின்படி அமெரிக்காவுக்கும், வட கொரியாவுக்கும் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : அமெரிக்கா அதிபரைப் பார்த்து முறைத்த சிறுமி!

Last Updated : Sep 25, 2019, 10:25 AM IST

ABOUT THE AUTHOR

...view details