அண்மையில் அமெரிக்கா தலைநகர் வாஷிங்டன் வந்தடைந்த ஃபேஸ்புக் தலைமைச் செயல் அலுவலர் அந்நாட்டு செனட்டர்களுடன் ஃபேஸ்புக்கில் இருக்கும் பிரச்னைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
இது குறித்து செனட்டர் ஜேஷ் ஹாலே தனது ட்விட்டர் பக்கத்தில், "வாஷிங்டன் வந்த மார்க் சக்கர்பெர்க்கை சந்தித்து இருவரும் வெளிப்படையாகப் பேசிக்கொண்டோம்.
அப்போது, உலகில் பயனாளர்கள் அதிகம் பயன்படுத்தும் தளமான ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு வெளிப்படைத்தன்மை, போட்டி, ஒருதலைப்பட்சம் அந்தரங்க உரிமை ஆகியவற்றில் அக்கறை இருந்தால் இரண்டு விஷயங்கள் செய்ய வேண்டும் என சக்கர்பெர்க்கிடம் முறையிட்டேன். ஒன்று வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராமை விற்றுவிட வேண்டும். மற்றொன்று சுதந்திரமான அமைப்புடன் தணிக்கை செய்யும் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என்றும் அவரிடம் தெரிவித்தேன்.
ஃபேஸ்புக் தலைமைச் செயலதிகாரி மார்க் சக்கர்பர்க் ஆனால், இரண்டையுமே சக்கர்பெர்க் ஏற்க மறுத்து, எவ்வளவு விலைகொடுத்தாலும் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகிய தரவுகளை விற்கமாட்டேன் என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்" எனப் பதிவிட்டுள்ளார்.
மேலும், ராணுவ மாளிகையில் மார்க் சக்கர்பெர்க், அதிபர் ட்ரம்ப்பை சந்தித்துப் பேசியுள்ளார். இந்தச் சந்திப்பு நன்றாக இருந்தது என்று அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.