அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், சந்திரனுக்கு மனிதர்களை அனுப்புவதற்கான நாசாவின் திட்டம் குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார்.
'சந்திரன் செவ்வாய் கிரகத்தின் ஒரு பகுதி' - சர்ச்சைக்குள் சிக்கிய ட்ரம்ப்! - mars
வாஷிங்டன்: சந்திரன் செவ்வாய் கிரகத்தின் ஒருபகுதி என்று கூறிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை நெட்டிசன்கள் விமர்சித்துவருகின்றனர்.
donald trump
அதில், "சந்திரனுக்கு மனிதர்களை அனுப்புவதைப்பற்றி பேசிக்கொண்டிருக்கக் கூடாது. சந்திரனுக்கு செல்வதை 50 ஆண்டுகளுக்கு முன்னரே அமெரிக்கா சாதித்துவிட்டது. ஆகையால் செவ்வாய் (அதில் சந்திரன் ஒரு பகுதி), பாதுகாப்பு, அறிவியல் முதலியவற்றில் நாசா கவனம் செலுத்த வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
இவற்றில் சந்திரன் செவ்வாய் கிரகத்தின் ஒரு பகுதி என்று கூறியதற்காக டிரம்ப்பை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.