தொழிற்சாலைகள், வாகன புகைகள் ஆகியவை காரணமாக நமது பூமியின் வெப்பம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இந்த புவி வெப்பமயமாதல் காரணமாக இரு துருவங்களில் இருக்கும் பணிப்பாறைகள் கரைந்து கடலின் நீர்மட்டம் அதிகரித்துவருகிறது.
இதனால் கடலுக்கு அருகில் இருக்கும் நாடுகள் பெரும் ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் மிக முக்கியச் சுற்றுலாத் தளங்களில் ஒன்றான இத்தாலியின் வெனிஸ் இன்னும் சில ஆண்டுகளில் முற்றிலுமாக நீருக்கு அடியில் மூழ்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், உயரும் கடல் மட்டத்தை துல்லியமாக கண்காணிக்க ஏதுவாக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா இரண்டு செயற்கைக்கோள்களை ஏவ திட்டமிட்டுள்ளது. சென்டினல் -6 / ஜேசன்-சிஎஸ் (சேவையின் தொடர்ச்சி) என்று பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ் இரண்டு செயற்கைக்கோள்கள் ஏவப்படவுள்ளது.