பழங்குடியினப் பள்ளிகள்:
பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் 1970ஆம் ஆண்டு வரையிலான காலனித்துவ அரசு, அந்நாட்டின் பழங்குடியின மக்களின் குழந்தைகளை வலுக்கட்டாயமாகக் குடியிருப்புப் பள்ளிகளில் சேர்த்தது. அதன்படி 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் சேர்க்கப்பட்டு, கிறிஸ்தவ மதத்திற்கு மாற வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டனர்.
அவர்களுக்குத் தாய் மொழியில் பேச அனுமதி வழங்கப்படவில்லை. அத்துடன் பெற்றோர்களைச் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது. உடல் ரீதியாகவும், பாலியல் ரீதியாக வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர். இதன் காரணமாக ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். அதைத்தொடர்ந்து ஆட்சி மாற்றங்களினால் இதுபோன்ற கொடுமைகள் படிப்படியாக குறைந்தன.
இதுகுறித்து 2008ஆம் வெளியான ஆய்வறிக்கையில், காலனித்துவ அரசுப் பள்ளிகளில் பழங்குடியின மக்களின் குழந்தைகள் தாய் மொழியைப் பேசியதற்காகக் கொல்லப்பட்டதும், பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டதும் வெளிச்சத்துக்கு வந்தது. இதற்காக கனடா அரசாங்கம் அந்தாண்டு நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கோரியதுடன், குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டது.