தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

'சிறுபான்மையினர் மீது வன்முறை... கோட்டைவிட்ட இந்தியா' - அமெரிக்கா ரிப்போர்ட்

வாஷிங்டன்: 2018ஆம் ஆண்டு சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் அதிகளவில் தொடர்ந்து நடைபெற்றதாகவும், அதனைக் கட்டுப்படுத்த இந்திய அரசு தவறவிட்டதாகவும் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

mike pompeo

By

Published : Jun 22, 2019, 11:19 PM IST

'இந்தியா 2018 சர்வதேச மத சுதந்திரம்' (India 2018 Religious Freedom Report) என பெயரிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில், 2018ஆம் ஆண்டு சிறுபான்மையினர், குறிப்பாக இஸ்லாமியர்கள் மீது இந்துத்தவ அடிப்படைவாதிகள் அதிகளவில்தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டதாகவும், இந்த வன்முறைகளைக் கட்டுப்படுத்த இந்திய அரசு முறையான நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், இந்தியாவில் 24 மாநிலங்களில் மாட்டு இறைச்சிக்கான தடை அமலில் இருப்பதாகவும், இதனால் இஸ்லாமியர்கள், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், வன்முறை, கொலை சம்பவங்களில் ஈடுபட்ட பசு காப்பாளர்களின் மீது நடவடிக்கை எடுக்க அரசு அலுவலர்கள் தவறவிட்டனர் என்றும், பாஜகவின் மூத்த தலைவர்கள் சிறுபான்மையினர்களுக்கு எதிராகப் பேசியிருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details