சியாட்டில்: மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தங்களிடம் உள்ள 50 செய்தி தயாரிப்பு ஊழியர்களை ஜூன் 30ஆம் தேதிக்கு பிறகு, வேலைக்கு வரவேண்டாம் எனக் கூறி, அவர்களுக்கு பதிலாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
சியாட்டில் டைம்ஸின் அறிக்கைபடி, சுமார் 50 ஊழியர்கள், அதாவது ஊழியர்களை வழங்கும் நிறுவனங்களான அக்வென்ட், ஐ.எஃப்.ஜி மற்றும் மேக் கன்சல்டிங் மூலம் ஒப்பந்தம் செய்யப்பட்டு, எம்.எஸ்.என் தளத்தின் செய்தி தயாரிப்புப் பிரிவில் பணியாற்றி வந்தனர். இவர்கள் ஜூன் 30ஆம் தேதிக்குப் பிறகு வேலைக்கு வரவேண்டாம் என நிறுவனம் தெரிவித்துள்ளது.