வட கரோலினா மாகாணத்தில் உள்ள மருத்துவமனையில் ஆளில்லா விமானம் மூலம் ரத்த மாதிரிகளை சிறிய பெட்டிகளில் வைத்து கொண்டு செல்லும் சோதனை முயற்சி நடைபெற்றது. இதுதொடர்பாக பேசிய அந்நிறுவனத்தின் இயக்குநர் ஸ்டுவர்ட் கின், "இத்திட்டத்தின் மூலம் நோயாளிகள் மிக குறைந்த நேரத்தில் ரத்த பரிசோதனை முடிவுகளை தெரிந்து கொள்ள முடியும் " என்றார்.
ரத்த மாதிரிகளை ட்ரோன் மூலம் கொண்டு செல்லும் திட்டம் அறிமுகம்! - takes-off
வட கரோலினா: அமெரிக்காவில் ரத்த மாதிரிகளை ஆளில்லா விமானம் மூலம் கொண்டு செல்லும் திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆளில்லா விமானம் மூலம் ரத்த மாதிரிகள் கொண்டு செல்லும் திட்டம்
மருத்துவமனையின் மைய பகுதியிலிருந்து ரத்த பரிசோதனை மையத்திற்கு ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 6 முறை இந்த ஆளில்லா விமானம் பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.