அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 3ஆம் தேதி நடைபெறவுள்ளதால் தேர்தல் களம் பரபரப்புடன் காணப்படுகிறது. இந்தச் சூடான நேரத்திலும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது பரப்புரைகளில் சுவையான வசனங்களைப் பேசி, சுவாரஸ்யத்துக்கு குறைவேதும் வராமல் பார்த்துக்கொள்கிறார்.
கடந்த மாதம் நார்த் கரோலினா மாகாணத்தில் நடைபெற்ற பரப்புரையின்போது பேசிய ட்ரம்ப், நான் தேர்தலில் தோற்றால் என்ன செய்வேன் என்றே தெரியாது. உங்களிடம் பேசவே மாட்டேன் என்று மக்களை அன்பாக மிரட்டினார்.
தற்போது ஜார்ஜியாவில் நடைபெற்ற பரப்பரையில் மீண்டும் பரபரப்பு கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். "அரசியல் வரலாற்றில் மிக மோசமான வேட்பாளரை எதிர்த்துதான் போட்டியிடுகிறேன்.
எனவே இந்தத் தேர்தலில் தோல்வி என்பதை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியாது. அப்படி ஒன்று நடந்தால், நாட்டை விட்டு வெளியேறிவிடுவேன்" என குபீர் மிரட்டலை விடுத்துள்ளார் ட்ரம்ப். அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்ப், ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பிடன் வேட்பாளராகப் போட்டியிடுகின்றனர்.
இதையும் படிங்க:இஸ்லாமிய கேலிச்சித்திரங்கள் குறித்து விவாதம், சுட்டுக்கொல்லப்பட்ட ஆசிரியர்... பயங்காரவாத நடவடிக்கை காரணமா?