தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

பாலத்திலிருந்து கீழே விழுந்த இளைஞர்: பதைபதைக்க வைக்கும் காட்சி! - tulsa

வாஷிங்டன்: அமெரிக்காவின் ஓக்லஹோமா மாகாணத்தில் காவல் துறையினரின் துப்பாக்கிச் சூட்டிற்குப் பயந்து 30 அடி உயர பாலத்திலிருந்து ஒருவர் கீழே விழும் காட்சி அனைவரும் பதைபதைக்க வைத்துள்ளது.

பதபதைக்க வைக்கும் காட்சி

By

Published : Jun 15, 2019, 7:49 PM IST

ஓக்லஹோமா மாகாணத்திலுள்ள துல்சா என்னும் பகுதியில் குற்றவாளியாகக் கருதப்படும் டாமாகோ டெய்லர் என்பவர் ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி காவல் துறையின் பிடியிலிருந்து தப்ப முயன்றார். அப்பொழுது, அங்குள்ள 30 அடி உயரம் கொண்ட பாலத்தின் பக்கவாட்டு சுவரை பிடித்தபடி தொங்கியுள்ளார்.

அந்த சமயத்தில், அவரை துப்பாக்கி முனையில் காவல் துறையினர் மிரட்டினார். இதனையடுத்து, பீதியில் டெய்லர் பாலத்திலிருந்து கீழே விழுந்தார். இதில், அவருக்கு மண்டை உடைந்ததையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். சிகிச்சை முடிந்ததையடுத்து காவல் துறையினர் அவரை கைது செய்தனர்.

பாலத்திலிருந்து கீழே விழுந்த இளைஞர்

இந்நிலையில், இந்த சம்பவத்தை காவல் துறையினர் பதிவு செய்த காணொலி தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில், டெய்லர் கீழே விழுவது அனைவரையும் பதைபதைக்க வைத்துள்ளது. இந்த வீடியோவை தற்போது ஏன் வெளியிடப்பட்டுள்ளது என்ற காரணம் தெரிவிக்கப்படவில்லை.

ABOUT THE AUTHOR

...view details