தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

'ஹலோ சார், எங்க முதலாளிக்கு சீட்டோஸ் வேணுமாம்' - கடையைத் தட்டிய க்யூட் நாய்க்குட்டி

மெக்ஸிகோ: உரிமையாளருக்காக சீட்டோஸ் பாக்கெட் வாங்க கடைக்குச் சென்ற நாயின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

மெக்ஸிகோ
மெக்ஸிகோ

By

Published : Mar 25, 2020, 9:24 PM IST

உலகை பயமுறுத்தும் கரோனா வைரஸ் பெருந்தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. முதல்கட்டமாக மக்கள் அனைவரும் வீட்டிலே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இச்சமயத்தில் தான் மக்களின் கிரியேட்டிவ் ஐடியாவும் வெளியே எட்டிப்பார்க்கிறது.

மெக்ஸிகோவை சேர்ந்த அன்டோனியோ முனோஸ் என்பவர் தனக்குத் தேவையான சீட்டோஸ் பாக்கெட்டை வாங்க தனது செல்ல நாய்க்குட்டியை அனுப்பியுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அவர், தனது நாயின் கழுத்தில் அட்டை ஒன்றை மாட்டி கடைக்கு அனுப்பியுள்ளார். அந்த அட்டையில், "வணக்கம் ஷாப்கீப்பர், தயவுசெய்து என் நாயிடம் ஆரஞ்சு நிறம் கொண்ட சீட்டோஸ் பாக்கெட்டை அளிக்கவும். சிவப்பு நிறம் பாக்கெட் வேண்டாம் அவற்றில் காரம் அதிகமாக உள்ளது. நாயின் காலரில் 20 ரூபாய் இணைத்துள்ளேன்" என்று எழுதியிருந்தார். நாயிடம் ஒழுங்காக நடந்துகொள்ளாவிட்டால் அது கடித்துவிடும் எனவும் அந்த அட்டையில் எழுதி எச்சரித்திருந்தார்.

இந்தப் புகைப்படத்தை பேஸ்புக்கில் பகிர்ந்த அன்டோனியோ, "தனிமைப்படுத்தப்பட்டு மூன்றாம் நாள் ஆகிறது. எனக்கு சீட்டோஸ் வேணும். நாய் சீட்டோஸ் பாக்கெட்டுடன் வீட்டிற்கு வருகிறது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது" எனப் பதிவிட்டிருந்தார்.

இதைப் பகிர்ந்த மக்கள், பலரும் தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அதில் ஒருவர், "எனது நாய்க்குட்டியிடம் இதே மாதிரி முயற்சி செய்தேன்; ஆனால் வேலை செய்யவில்லை" என்று மிகுந்த சோகத்துடன் தெரிவித்திருந்தார். இதேபோல், சைப்ரஸ் நாட்டில் நாயை வாக்கிங் அனுப்பும்போது கண்காணிக்க ட்ரோன் மாட்டிவிட்ட ருசிகர சம்பவமும் நடந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:கரோனா அச்சுறுத்தல்: உயிரிழப்பில் சீனாவை விஞ்சிய ஸ்பெயின்

ABOUT THE AUTHOR

...view details