பப்புவா நியூ கினியா தீவில் உள்ளூர் நேரப்படி சரியாக இரவு 9.19 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகியுள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - மக்கள் பீதி! - earthquake
வாஷிங்டன்: பப்புவா நியூ கினியா தீவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். இது ரிக்டர் அளவு கோலில் 7.2 ஆக பதிவாகியுள்ளது.
பப்புவா நியூ கினியா
இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து இதுவரை எவ்வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை. சுனாமி எச்சரிக்கை எதும் விடுக்கப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.13 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 5.5 ஆக பதிவாகியுள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.