தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ரஷ்யாவின் அறிவுறுத்தலால் கியூபா செல்லும் திட்டத்தை மடூரோ கைவிட்டார் - மைக் பாம்பியோ தகவல்! - venezuela

வாஷிங்டன்: வெனிசுவேலாவிலிருந்து அந்நாட்டு அதிபர் மடூரோ, கியூபாவுக்கு செல்வதை ரஷ்யா தடுத்து நிறுத்தியுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ தெரிவித்ததுள்ளது அபத்தமானது என ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மைக் பாம்போ

By

Published : May 1, 2019, 12:16 PM IST

வெனிசுவேலாவில் அதிபர் மடூரோ தனது அதிகாரத்தை பயன்படுத்தி தலைநகர் கராகஸ்ஸில் நடைபெறும் போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இரக்கமற்ற முறையில் ராணுவ வாகனங்களை போராட்டக்காரர்கள் மீது ஏற்றியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் தொடர்பாக பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ, "வெனிசுவேலாவிலிருந்து தனி விமானம் மூலம் கியூபாவுக்கு செல்ல மடூரோ இன்று காலை திட்டமிட்டிருந்தார். ஆனால் இந்த முடிவை கைவிடுமாறு ரஷ்யா வலியுறுத்தியுள்ளது. வெனிசுவேலாவில் ஜனநாயகத்தை மீண்டும் கொண்டுவர அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது" என்றார்.

போராட்டக்காரர்கள் மீது ராணுவ வாகனம் ஏறும் காட்சி

இந்நிலையில், இதற்கு ரஷ்யா தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரஷ்யா வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கூறுகையில், "அமெரிக்கா பொய்யான செய்தியை பரப்பி வருகிறது. இது அபத்தமானது" என தெரிவித்தார்.

இதற்கிடையே, வெனிசுவேலாவிலிருந்து கியூபா ராணுவப்படை வெளியேறாவிட்டால் பொருளாதார தடை விதிக்கப்படுமென ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கைக்கு பதிலத்துள்ள கியூபா அதிபர் மிகுல் டயஸ் கேனல், "வெனிசுவேலாவில் கியூபா ராணுவப்படை இருப்பதாக ட்ரம்ப் கூறுவதை திட்டவட்டமாக மறுக்கின்றோம். இந்த ஆபத்தான சூழலை முடிவுக்கு கொண்டுவர சர்வதேச அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கின்றோம்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details