தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

உய்கர் மக்கள் மீது ஒடுக்குமுறையை ஏவும் சீனா: அதிர்ச்சியூட்டும் ரிப்போர்ட்!

நியூயார்க்: லட்சக்கணக்கான உய்கர் இன மக்களை சீன அரசு தடுப்பு முகாம்களிலும், சிறைகளிலும் அடைத்து சித்திரவதை செய்து வருவதாக அமெரிக்காவில் வெளியாகும் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

uighur muslims

By

Published : Nov 19, 2019, 1:29 AM IST

Updated : Nov 19, 2019, 8:10 AM IST

சீனாவின் வடமேற்கு மூளையில் உள்ளது தன்னாட்சி மாகாணமான சின்ஜியாங். அங்கு இஸ்லாம் மதத்தைப் பின்பற்றும் உய்கர் என்ற சிறுபான்மையின மக்கள் அதிகம் வாழ்ந்து வருகின்றனர்.

பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டுவோம் என்ற பெயரில் சீன அதிபர் ஜி ஜின்பிங் தலைமையிலான அரசு, லட்சக்கணக்கான உய்கர் இன மக்களை கைது செய்து, தடுப்பு முகாம்களில் அடைத்து கம்யூனிச சித்தாந்தங்களை வற்புறுத்தி கற்பித்து, அவர்களது கலாசாரத்தை அழித்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

இந்த குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையில், நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை சீனஅரசின் ஆவணங்களை கசியவிட்டு அதிர்ச்சியூட்டும் வகையில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.

சுமார் 400 பக்கங்களைக் கொண்ட இந்த ஆவணங்களில், சின்ஜியாங் மாகாணத்தில் தீய நம்பிக்கைகள் அங்குள்ள மக்களை ஆட்கொண்டு வருகிறதாகவும், இந்த நம்பிக்கைகளை அழிக்க வேண்டும் என்றும் சீன அலுவலர்கள் பேசியுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், லட்சக்கணக்கான உய்கர் இன மக்களை சீன அரசு இரக்கமின்றி தடுப்பு முகாம்களிலும், சிறைகளிலும் அடைத்து கம்யூனிச சித்தாந்தங்கள் கற்பிக்கப்பட்டு வருவதாகவும் அந்த ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், உய்கர் மக்கள் மீது ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்து விட சின அதிபர் ஜி ஜின்பிங் நேரடியாக கட்டளையிட்டது போன்று அந்த ஆவணங்களில் எங்கும் குறிப்பிடவில்லை.

இதையும் படிங்க : இந்திய-பாகிஸ்தான் பிரச்னையில் சீனா ஏன் தலையிடுகிறது?

Last Updated : Nov 19, 2019, 8:10 AM IST

ABOUT THE AUTHOR

...view details