தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

பயங்கர தீ விபத்தில் 200 வீடுகள் எரிந்து நாசம்! - அமெரிக்கா

லிமா: தென் அமெரிக்காவின் மேற்கில் உள்ள 'பெரு' நாட்டின் தலைநகரான லிமா நகரின் அருகே ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 200க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசமாயின.

லிமா நாகரில் பயங்கர தீ விபத்து-200 வீடுகள் எரிந்து நாசம்!

By

Published : Jul 26, 2019, 2:56 PM IST

லிமா நகரின் சான் ஜுவான் போஸ்கோ பகுதியில் நேற்று அதிகாலை 4:00 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் உள்ள வீடுகள் மரத்தினாலான எரியக்கூடிய பொருட்களால் கட்டப்பட்டவை என்பதால் வேகமாக பரவிய தீயால் 200க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசமாயின.

பயங்கர தீ விபத்து-200 வீடுகள் எரிந்து நாசம்!

தீ விபத்து பற்றி லிமா நகரின் தீயணைப்புத்துறை உயரதிகாரி லாரி லிஞ்ச், சான் ஜுவான் போஸ்கோ பகுதியில் 200 வீடுகளுக்கு மேல் தீயினால் எரிந்து நாசமாயின. இது காற்று அதிகமாக வீசக்கூடிய பகுதி என்பதால் தீ வேகமாக பரவியுள்ளது. நீர்ப் பற்றாக்குறை மற்றும் மரத்தினலான பொருட்கள் அதிகமாக இருந்த காரணத்தால் தீயை அணைக்க தாமதமானது. அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்று கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details