தேசிய சுகாதார மையத்தில் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸூக்கு கரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் இன்று செலுத்தப்பட்டது. தனது கணவர் டக் எம்ஹாஃப்புடன் அவர் இரண்டாவது டோஸ் போட்டு கொண்டது தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.
கரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸை போட்டுக் கொண்ட கமலா ஹாரிஸ்! - கரோனா தடுப்பூசி இரண்டாவது டோஸ்
வாஷிங்டன்: அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸூக்கு கரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் இன்று செலுத்தப்பட்டது.
பின்னர் அவர் கூறுகையில், "அவரவருக்கு வாய்ப்பு கிடைக்கும்போது, கரோனா தடுப்பூசியை போட்டு கொள்ள வேண்டும். அது உங்களின் வாழ்க்கையை காப்பாற்றும்" என்றார். கரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் அவருக்கு டிசம்பர் 29ஆம் தேதி செலுத்தப்பட்டது.
கடந்த டிசம்பர் மாதம், அமெரிக்காவில் இரண்டு கரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கரோனா தடுப்பூசி விநியோகம் மந்தமாக நடைபெற்றுவந்த நிலையில், கடந்த ஒரு வார காலமாக, ஒரு நாளைக்கு 10 லட்சம் பேருக்கு மேல் கரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. பதவியேற்று 100 நாள்களில், 1 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு வெளியிட்டிருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.