அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 3ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில், குடியரசுக் கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். ஜனநாயகக் கட்சி வேட்பாளராக ஜோ பிடன் போட்டியிடுகிறார்.
அமெரிக்காவில் நடத்தப்பட்ட தேர்தல் கருத்து கணிப்பில், இதுவரை ஜனநாயகக் கட்சியே முன்னிலையில் உள்ளது. காலங்காலமாக குடியரசு கட்சிக்கு வாக்களித்து வரும் ஜார்ஜியா போன்ற மாகாணங்களிலும்கூட, இம்முறை ஜனநாயகக் கட்சியே வெற்றிபெற வாய்ப்புள்ளதாக கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், ஜார்ஜியா மாகாணத்தில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் பேசிய ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ், "ட்ரம்ப் இனவெறியர் என்று நீங்கள் நினைக்கிறீர்களா என மக்கள் என்னிடம் அடிக்கடி கேட்பார்கள். ஆம், அவர் இனவெறி கொண்டவர் என்றே நான் நினைக்கிறேன்.