தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

கனடா நாடாளுமன்றத்தை கலைத்த ஜஸ்டின்...

ஓட்டவா: கனடா நாட்டின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாகவும், அடுத்த மாதம் 21ஆம் தேதி கனடாநாட்டிற்கு பொதுத் தேர்தல் நடைபெறும் எனவும் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.

ஜஸ்டின்

By

Published : Sep 12, 2019, 10:33 PM IST

Updated : Sep 13, 2019, 7:48 AM IST

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 2015ஆம் ஆண்டு கனடாவின் பிரதமராகப் பதவி ஏற்றார். தற்போது கனடாவில் பொதுத்தேர்தல் நெருங்கி வருகிறது. இந்நிலையில் "A Nanos Research" என்ற அமைப்பு நாடாளுமன்றத்தில் ஜஸ்டினுக்குப் போதிய வெற்றி வாய்ப்பு இல்லையென கருத்துக் கணிப்பில் தெரிவித்தது.

இந்நிலையில், கனடா நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக அந்நாட்டு பிரதமர் நேற்று அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.மேலும் கனடா பொதுத் தேர்தல் அடுத்த மாதம் 21ஆம் தேதி நடக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இதற்கு கவர்னர் ஜெனரல் ஜூலியும் ஒப்புதல் வழங்கினார்.

இதையடுத்து, தேர்தலுக்கான பரப்புரை தொடங்க உள்ளது. கனடாவில் 4 வருடங்களுக்கு ஒருமுறை நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Last Updated : Sep 13, 2019, 7:48 AM IST

ABOUT THE AUTHOR

...view details