தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஜஸ்டின் ட்ரூடோ 2.0: இந்தியா- கனடா உறவில் தொடரும் பதற்றம்! - பிரதமர் நரேந்திர மோடி

கனடாவில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையில் லிபரல் கட்சி மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையில் கனடா - இந்தியா உறவு எவ்வாறு இருக்கும் என காணலாம்.

Continued tension in India-Canada relationship

By

Published : Nov 5, 2019, 4:04 PM IST

ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான கனடாவின் லிபரல் கட்சி அக்டோபர் 21ஆம் தேதி நடந்த பொதுத் தேர்தலில் நாடாளுமன்ற பெரும்பான்மையை இழக்கும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. முடிவுகளும் கருத்துக் கணிப்புகளும் அவ்வாறே உறுதிப்படுத்தின. ஆனால், மக்கள் முடிவுகள் லிபரல் கட்சிக்கு புது தெம்பை அளித்துள்ளன. அக்கட்சி 157 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக விளங்குகிறது. கனடாவில் மொத்தம் 338 இடங்கள். கடந்த தேர்தலை விட, இத்தேர்தலில் 20 இடங்கள் மட்டுமே குறைவு.
அவர்களை எதிர்த்து போட்டியிட்ட பிரதான எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சி, ஜஸ்டினின் லிபரல் கட்சியை விட அதிக வாக்குகளைப் பெற்றிருந்தாலும், அக்கட்சியால் வெறும் 121 இடங்களை மட்டுமே பெற முடிந்தது. இந்த செயல்முறையின் முடிவில் நாட்டில் 24 எம்.பி.க்களுடன் இடதுசாரி என்.டி.பி.க்கு (தேசிய ஜனநாயகக் கட்சி) தலைமை தாங்கிய இந்தோ-கனேடிய கிங்மேக்கர் ஜக்மீத் சிங் எழுந்திருப்பார் என்று சிலர் கணித்திருக்க முடியும்.

ஜக்மீத் சிங் வெளிப்படையாக பேசும் காலிஸ்தானிய அனுதாபி. இந்தியாவை எதிர்ப்பவராகவும் இவர் அறியப்படுகிறார். வரவிருக்கும் சிறுபான்மை (பெரும்பான்மை அல்லாத) ஜஸ்டின் ட்ரூடோ அரசாங்கம் என்.டி.பி அல்லது பிளாக் கியூபெக் (மூன்றாவது பெரிய கட்சி) ஆகியவற்றைச் சார்ந்திருக்க வேண்டும். இது இந்தியா-கனடா உறவுகளுக்கு ஒரு நல்ல செய்தி அல்ல.

இருப்பினும் இயற்கை ரிதீயாகவே இந்தியாவும் - கனடாவும் நெருங்கிய நட்பு நாடுகள். இரு நாடுகளின் பலம் பன்முக கலாசாரம், வலுவான ஜனநாயகம். புலம்பெயர்ந்தோருக்கும் (அகதிகள்) இருநாடுகளும் அடைக்கலம் அளிக்க தவறுவதில்லை. இருப்பினும், தற்போது இரு நாடுகளுக்கும் இடையே உறவுகள் சிறப்பாக இல்லை.
நிச்சயம், இது நம்ப முடியாதது தான். 42 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர், கனடா சென்ற முதல் பிரதமர் நரேந்திர மோடி ஆவார். இந்த வரலாற்றுப் பயணம் பல பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு சாத்தியமானது. கன்சர்வேடிவ் கட்சியில் இருந்து பிரதமராக இருந்த ஸ்டீபன் ஹார்ப்பர் தலைமையிலான கனேடிய அரசாங்கம் முதன்முறையாக இந்தியாவின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் பேணுவதாக பகிரங்கமாக உறுதியளித்தது.

அப்போது இரு தரப்பினருக்கும் இடையிலான உறவில் ஒரு புதிய அத்தியாயம் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தோன்றியது. இருப்பினும், 2015ஆம் ஆண்டு அக்டோபர் பொதுத்தேர்தலில் இளம் தலைவர் ஜஸ்டின் ட்ரூடோ பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றார். அவரை வாழ்த்திய முதல் தலைவர்களில் பிரதமர் நரேந்திர மோடியும் ஒருவர். இந்தியாவுக்கு வர அவருக்கு அன்பான அழைப்பையும் வழங்கினார். ஆனால் ஜஸ்டின் தனிநாடு கோரும் சீக்கிய ஆதரவாளர்களுக்கு அடைக்கலம் கொடுத்தார்.

ஜஸ்டின் ட்ரூடோ- பிரதமர் நரேந்திர மோடி
கனடாவில் உள்ள புலம்பெயர்ந்த சீக்கிய சமூகத்தினர் ட்ரூடோவுக்கு முழு ஆதரவு, நிதி, அரசியல் பாதுகாப்பை வழங்குகின்றனர். அதற்கு அவர் நன்றியுள்ளவராக திகழ்கிறார். சீக்கிய சமூகம் அவரை ஜஸ்டின் சிங் என்றே அழைக்கிறது. எனவே அவர் பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்ட, பலம்பொருந்திய இலாக்காக்களை ஹர்ஜித் சிங் சஜ்ஜானிடம் ஒப்படைத்தார். தேர்தல் பரப்புரையின்போதும் தனது சீக்கிய வாக்கு வங்கியை வலுப்படுத்துவதில் அவர் ஈடுபட்டார்.

பெரும்பாலும் காலிஸ்தானிய சக்திகளால் கட்டுப்படுத்தப்பட்டார். அவர்கள் அரசியல்வாதிகள், சீக்கிய நலஆர்வலர்களுக்குத் தாராளமய நன்கொடைகளை வழங்குகிறார்கள். பல பணக்கார கனேடிய குருத்வாராக்களின் நிர்வாகம், நிதிக் கட்டுப்பாட்டையும் அவர்கள் பெற்றுக் கொடுக்கின்றனர். பிரிவினைவாத நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதற்காக இந்த வளங்களை (பணத்தை) செலவழிப்பதில் அவர்கள் வெட்கப்படுவதில்லை.
வரலாற்று ரிதீயாக, கனடாவில் சீக்கியர்கள் அதிக அளவில் லிபரல் கட்சிக்கு வாக்களித்துள்ளனர். 1970 கள் மற்றும் 1980களில் பஞ்சாப் பிரச்னையின் போது, ஜஸ்டின் ட்ரூடோவின் தந்தை, அப்போதைய பிரதமர் பியர் ட்ரூடோ, வெளிநாட்டினருக்கு, குறிப்பாக பஞ்சாபில் இருந்து புலம்பெயர்ந்த குடிமக்களுக்கு கனடாவின் கதவுகளைத் திறந்தார். அந்த நேரத்தில் ஏராளமான சீக்கியர்கள் கனடாவுக்கு குடிபெயர்ந்தனர். அவர்கள் பெரும்பாலும் இந்தியாவின் அரசியல் ஒடுக்குமுறையைப் பற்றி பேசுகின்றனர்.
கனடாவின் மேற்கு கடற்கரைக்கு பஞ்சாபியர்கள் (பெரும்பாலும் சீக்கியர்கள்) இடம்பெயர்ந்தது 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நடந்தது. 1970 - 1980 வரை பத்து ஆண்டுகளில் கூட்டம் கூட்டமாக சீக்கியர்கள் கனடாவுக்கு படையெடுத்துச் சென்றனர். இதன் காரணமாக தற்போது, கனடா மக்கள் தொகையில் நான்கு விழுக்காடு சீக்கியர்கள் உள்ளனர். பத்து லட்சம் இந்துக்கள், ஐந்து லட்சம் சீக்கியர்கள் என அவர்களின் ஆதரவு ஜஸ்டினுக்கு உள்ளது. டொராண்டோவின் புறநகர்ப் பகுதிகளான மிசிசாகா மற்றும் வான்கூவர் புறநகர்ப் பகுதிகளான பிராம்ப்டன், சர்ரே மற்றும் கல்கரி போன்ற இடங்களில் சீக்கியர்கள் குவிந்துள்ளனர்.

இது 8 முதல் 10 தொகுதிகளில், வெற்றி முடிவை வகுக்க உதவுகிறது. இதுமட்டுமின்றி சில இடங்களில் எதிர்க்கட்சியின் வெற்றியையும் பாதிக்கிறது. ஆக தற்போதைய கனடா நாடாளுமன்றத்தில் 18 சீக்கிய எம்.பி.க்கள் (இந்தியாவில் 13) உள்ளனர். கனடாவில் அதிகம் பேசப்படும் நான்காவது மொழியாக பஞ்சாபி மாறியுள்ளது. கனடாவில் பயங்கரவாத அச்சுறுத்தல் குறித்த பொது அறிக்கை 2018ஆம் ஆண்டின் பிற்பகுதியில் வெளியானது.
கனடாவில் சிலர் சீக்கிய (காலிஸ்தானி) தீவிரவாத சித்தாந்தங்களையும் இயக்கங்களையும் ஆதரிக்கின்றனர். 2019ஆம் ஆண்டு ஏப்ரலில் காலிஸ்தானிய சக்திகள் எதிர்ப்பு சப்தம் கொடுத்த பின்னர், சீக்கிய தீவிரவாதம் குறித்த அனைத்து குறிப்புகளையும் அந்நாட்டு அரசாங்கம் நீக்கியது. இதனை பஞ்சாப் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங் தெளிவாக வெளிப்படுத்தினார். அவர், 'கனடா அரசு இந்த முடிவை அரசியல் அழுத்தத்தின் கீழ் எடுத்துள்ளது. ட்ரூடோ தீயுடன் விளையாடுகிறார். இந்த முடிவு இந்தியா-கனடா உறவுகளை வருங்காலத்தில் பாதிக்கும். காலிஸ்தானிய தீவிரவாதத்தை நீக்குவது இந்தியாவின் தேசிய பாதுகாப்பையும் அச்சுறுத்தும்' என்றார்.

இவ்வாறான சூழ்நிலையில் புதிய அமைச்சரவை பதவிக்கு வரவுள்ளது. இந்த அமைச்சரவை முன்பை விட சில காலத்தை எடுத்துக் கொள்ளும். இந்த அமைச்சரவையில் சீக்கியர்களும் அமைச்சராக பதவியேற்க வாய்ப்புள்ளது. சிறுபான்மை அரசாக (பெரும்பான்மை அல்லாத) இருப்பதால், நான்கு ஆண்டுகளை வெற்றிகரமாக முடிக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
கனடா பொதுத்தேர்தலுக்கு முன்னதாக, அந்நாட்டு புலனாய்வு அமைப்புகள் ஒரு ரகசிய அறிக்கையை கசியவிட்டன. அதில், '2019 கனடா பொதுத்தேர்தல்களில் அதிகாரத்தை பிடிக்க கனடாவில் குடியேறிய (குறிப்பாக சீக்கியர்கள்) சமூகங்கள் ஆதிக்கம் செலுத்தும்' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் இந்திய- சீன அரசுகள் குறித்தும் அந்த அறிக்கை விவரித்தது. இதுகுறித்து விரிவான விளக்கம் எதுவும் பகிரப்படவில்லை.

இருப்பினும் இருநாடுகளுக்கு இடையேயான சிக்கலின் சமிக்ஞையாக இது பார்க்கப்படுகிறது. ஆக கனடாவில் ஏற்படவுள்ள புதிய அரசாங்கம் நிச்சயம் சில மாற்றங்களை எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படலாம். அவைகள் காலிஸ்தான் அனுதாபிகளுக்கு ஆதரவாக இருக்கும்பட்சத்தில் அது இந்திய- கனடா உறவில் சிக்கலை ஏற்படுத்தும். இவ்வாறான சமிக்ஞைகள் தற்போதே வெளிவரத் தொடங்கி விட்டன.

இதையும் படிங்க: #CanadaElection2019 கிங் மேக்கராக உருவெடுத்த இந்திய - கனடா அரசியல்வாதி

ABOUT THE AUTHOR

...view details