ஆப்கானிஸ்தானில் உள்ள மகப்பேறு மருத்துவமனையிலும், இறந்தவரின் இறுதிச்சடங்கிலும் கடந்த வாரத்தில் பயங்கரவாதிகளால் தாக்குதல் நடத்தப்பட்டது. காபுல் மகப்பேறு மருத்துவமனையில் நடந்த தாக்குதலில் 24 பேர் உயிரிழந்ததோடு, 16 பேர் காயமடைந்தனர். இதேபோல் கிழக்கு நங்கர்ஹார் பகுதியில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் 32 பேர் உயிரிழந்ததோடு, 103 பேர் காயமடைந்தனர்.
இந்தத் தாக்குதல் சம்பவத்தை தாங்கள் செய்யவில்லை என தலிபான் அறிவித்துள்ளது. இதையடுத்து ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி முகமது அஸ்ரஃப் கனி, நாட்டிலுள்ள பாதுகாப்பு நிலையை முடிவுக்குக் கொண்டு வந்ததோடு, தலிபான்கள் உள்ளிட்ட அனைத்துப் பயங்கரவாத குழுக்கள் மீதும் தாக்குதல் நடத்த தேசிய பாதுக்காப்புக் குழுவினருக்கு உத்தரவிட்டுள்ளார்.