எல்லை பாதுகாப்புக்கான நிதியை திரட்ட டிரம்ப் பல முறை முயன்றும் முடியவில்லை. அமெரிக்கா நாடாளுமன்ற கூட்டு குழு அமர்வு (Congress Joint Session) நிறைவேற்றிய மசோதாவும் டிரம்பின் நிதித் தேவையை பூர்த்தி செய்யவில்லை.
மெக்ஸிகோ எல்லை சுவர் கட்ட தேசிய அவசரநிலை: டிரம்ப் அறிவிப்பு - எல்லை சுவர்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மெக்ஸிகோ எல்லை தடுப்புச் சுவரை கட்ட தேசிய அவசர நிலையை பிரகடனம் செய்ய திட்டமிட்டுள்ளதாக வெள்ளை மாளிகை பிப்ரவரி 14-ம் தேதி அறிவித்துள்ளது.
இதனால், டிரம்ப் தேசிய அவசர நிலையை பிரகடனம் செய்து, எல்லைப் பாதுகாப்பு மசோதாவில் கையெழுத்திடுவார் என்றும், இதன் மூலமாக ராணுவ நிதிகளின் உதவியுடன் மெக்ஸிகோ எல்லை சுவர் கட்டப்படும் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
இதற்கு அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அந்நாட்டின் ஜனநாயக கட்சித் தலைவர் இந்த நடவடிக்கை குறித்து 'அதிகார துஷ்பிரயோகம்' என்றும், 'சட்டத்துக்கு புறம்பானது' என்றும் விமர்சித்துள்ளார்.
மெக்ஸிகோ எல்லை சுவர் எழுப்புவது டிரம்பின் முக்கியமான தேர்தல் வாக்குறுதி என்பது குறிப்பிடத்தக்கது.