கரோனா பெருந்தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவில் ஃபைசர் நிறுவனம் தயாரித்துள்ள கரோனா தடுப்பூசிகளின் முதல் டோஸ் நாளை(டிச.14) முதல் மக்களுக்குப் போடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களுக்குத் தடுப்பூசி விநியோகம் செய்யும் பணி நாளை(டிச.14) முதல் தொடங்கப்படவுள்ளது.
டிசம்பர் 14ஆம் தேதி, 145 இடங்களிலும்; டிசம்பர் 15ஆம் தேதி 425 இடங்களிலும்; டிசம்பர் 16ஆம் தேதி 66 இடங்களிலும் தடுப்பூசி விநியோகம் செய்யப்படவுள்ளது. முன்னதாக, டிசம்பர் 11ஆம் தேதி, ஃபைசர் நிறுவனம் தயாரித்த கரோனா தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசரப் பயன்பாட்டிற்கான அனுமதியை வழங்கியிருந்தது.