அமெரிக்காவில் வரும் நவம்பர் 3ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. குடியரசுக் கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் டொனாலட் ட்ரம்ப்பும் அவரை எதிர்த்து ஜனநாயகக் கட்சி வேட்பாளராக ஜோ பிடனும் களமிறங்குகின்றனர்.
இந்தத் தேர்தலில் துணை அதிபர் வேட்பாளராக இந்திய வம்சாவெளியைச் சேர்ந்த பெண் கமலா ஹாரிஸ் களமிறங்குகிறார். அமெரிக்க துணை அதிபர் பதவிக்கு கருப்பினப் பெண் ஒருவர் போட்டியிடுவது முதன்முறையாகும். இவர் தற்போதைய துணை அதிபரான மைக் பென்சை எதிர்த்து களம் காண்கிறார்.
இந்நிலையில், தேர்தலுக்கு சில நாட்கள் மட்டும் உள்ள நிலையில், தேர்தல் பரப்புரை சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. அமெரிக்காவில் சுமார் 13 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் வசிக்கும் நிலையில் இவர்களின் ஆதரவு தற்போது பிடன்-கமலா பக்கம் திரும்பியுள்ளது.
குடியேற்றம், நிறவெறி போன்ற விவகாரங்களில் டொனால்ட் ட்ரம்பின் கட்சி பிற்போக்குவாதக் கொள்கையைப் பின்பற்றி வருகிறது. அதேவேளை, ஜனநாயகக் கட்சி இவ்விவகாரங்களில் முறையான நிலைப்பாடு எடுத்து வருவதால், இருவரையும் ஆதரித்து அமெரிக்க வாழ் இந்தியர்கள் பல்வேறு இடங்களில் பேரணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:குரு நானக் பிறந்தநாளைக் கொண்டாட சீக்கியர்களுக்கு அழைப்பு விடுத்த பாகிஸ்தான்