தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

'வர்த்தக ஒப்பந்த்தை இறுதிசெய்வது தொடர்பான பேச்சுவார்த்தையில் அலுவலர்கள்' - அமெரிக்க தூதர்

வாஷிங்டன்: இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தத்தை இறுதிசெய்வது தொடர்பாக இருநாட்டு அலுவலர்களும் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருவதாக அமெரிக்க தூதர் அலிஸ் ஜி வெல்ஸ் தெரிவித்துள்ளார்.

By

Published : Feb 15, 2020, 1:55 PM IST

India US TRADE DEAL, இந்தியா அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம்
India US TRADE DEAL

இந்தியாவுக்கு அமெரிக்கா வழங்கிவந்த வர்த்தக சிறப்பு அந்தஸ்தை அந்நாடு கடந்த ஜூன் மாதம் ரத்து செய்தது. இதையடுத்து, இருநாட்டுக்கும் இடையே கசப்பான வர்த்தக உறவு நீடித்துவருகிறது.

இதற்குத் தீர்வு காண இருநாட்டு அலுவலர்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருகின்றன. இதன்விளைவாக, இம்மாதம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மேற்கொள்ளவுள்ள இந்திய சுற்றுப்பயணத்தின்போது இருநாட்டுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், அமெரிக்காவில் நடந்த 'அமெரிக்கா இந்தியா வர்த்தக கவுன்சில்' கூட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க தூதர் அலிஸ் ஜி வெல்ஸ், "இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வது தொடர்பாக இருநாடுகளும் தீவிரமாகப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருகின்றன. ட்ரம்ப்பின் இந்திய பயணத்தின்போது, ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தையாவது எட்டவில்லை என்றால் பெரும் பின்னடைவாக அமைந்துவிடும்" என்றார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் முதல்முறையாக வரும் பிப்ரவரி 24ஆம் தேதி இந்தியாவுக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வருகிறார்.

இதையும் படிங்க : 'இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளது' - ட்ரம்ப்

ABOUT THE AUTHOR

...view details