தென் அமெரிக்காவில் உள்ள பெரு நாட்டைச் சேர்ந்தவர்கள் மேபத் - ஹக்டர். காதலர்களான இவர்கள் ஆகஸ்ட் 6ஆம் தேதி மாலை நேரத்தில் வெளியே பொழுதை கழித்துவிட்டு, வீடு திரும்புவதற்காக ரயில்நிலையத்திற்குச் சென்றுள்ளனர்.
முத்தத்தில் சித்தமாக இருந்த காதலர்களுக்கு நேர்ந்த கதி! - ரயில் மேம்பாலம்
லிமா: பெரு நாட்டில் காதலர்கள் ரயில்வே மேம்பாலத்தில் அமர்ந்து முத்தம் கொடுக்கும்போது தவறி விழுந்ததில், காதலி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அப்போது அங்கிருந்த ரயில்வே மேம்பாலத்தில் இருவரும் அமர்ந்து கட்டி அணைத்தபடி முத்தம் கொடுத்துக்கொண்டனர். இதில் உணர்ச்சிவசப்பட்டு மேபத், ரயில் மேம்பாலத்தின் விளிம்பில் ஏறி அமர்ந்துகொண்டார். பின்னர் ஹக்டரை தன் கால்கள் நடுவில் அணைத்துக் கொண்டு முத்தம் கொடுக்க முயன்றுள்ளார்.
இதில் எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறிய மேபத், தன் காதலனையும் சேர்த்து கட்டி அணைத்தபடியே மேம்பாலத்திலிருந்து கீழே விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். ஹக்டர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. இந்நிலையில் தற்போது அதை அந்நாட்டு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.