அமெரிக்காவைச் சேர்ந்த ஐ.எம்.பி. நிறுவனம் அமேசான், கூகுள், ஃபேஸ்புக் ஆகிய நிறுவனங்களைப் போல தன்னையும் இளமையாக காட்டிக்கொள்ள கடந்த சில ஆண்டுகளால் சுமார் ஒரு லட்சம் பேரை வேலையைவிட்டு நீக்கியுள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
இது குறித்து ஐ.எம்.பி. நிறுவனத்திலிருந்து 2018ஆம் ஆண்டு நீக்கப்பட்ட லேங்கிலி கூறுகையில், புதிய இளம் நபர்களை வேலையில் எடுப்பதற்காக நியாயமற்ற முறையில் அனுபவம் வாய்ந்த ஊழியர்களை வேலையைவிட்டு நீக்குவதாக கூறினார்.
ஆனால் இதைத் திட்டவட்டமாக மறுத்துள்ள ஐ.எம்.பி. நிர்வாகம், தினசரி சுமார் எட்டாயிரம் பேர் வேலைக்காக தங்களிடம் விண்ணப்பிப்பதாகவும் ஆண்டுக்கு சுமார் 50 ஆயிரம் பேரை புதிதாக வேலைக்கு எடுப்பதாகவும் கூறியுள்ளது. அதனால் வேறுவழியின்றி குறைந்த செயல்திறனை வெளிப்படுத்துபவர்களை வேலையைவிட்டு நீக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
தனியார் நிறுவனம் நடத்திய விசாரணையில் ஐ.எம்.பி. நிர்வாகம் கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 40 வயதைக் கடந்த 20 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்துள்ளது தெரியவந்துள்ளது.