தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

அதிக வெப்பநிலையை தாங்குமா அமெரிக்காவின் முதல் குடும்பம்? - namaste trump event

அகமதாபாத்: அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றதிலிருந்து முதன்முறையாக இந்தியா வரும் டொனால்டு ட்ரம்ப், அவரது மனைவிக்கு இந்தியா வெப்பநிலை சவாலான ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hot weather awaits Trump
Hot weather awaits Trump

By

Published : Feb 22, 2020, 7:03 PM IST

அமெரிக்க அதிபர் வருகையால் அமெரிக்க - இந்திய உறவுகளில் நெருக்கம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில், அமெரிக்காவின் முதல் குடும்பத்தை வரவேற்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவருகிறது மத்திய அரசு.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அவரது மனைவி வரும் 24ஆம் தேதி இந்தியா வருகிறார். இரண்டு நாள்கள் இந்தியாவில் இருக்கப்போகும் ட்ரம்ப் முதலில் குஜராத் மாநிலம் அகமதாபாத்திற்கு வருகைதரவுள்ளார். பின்னர் அகமதாபாத்திலுள்ள மொதிரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் சேர்ந்து உரை நிகழ்த்தவுள்ளார்.

தாங்குவாரா ட்ரம்ப்?

இதையொட்டி, அகமதாபாத்தில் புதிய சாலைகள் அமைக்கப்பட்டும், ஏற்கனவே இருக்கும் சாலைகள் புதுப்பிக்கப்பட்டும் உள்ளன. முக்கியப் பகுதிகளில் ட்ரம்ப், பிரதமர் மோடி ஆகியோரை வரவேற்கும்வகையில் பிரமாண்ட பேனர்கள் வைக்கப்பட்டு, சுவர்களில் வண்ண ஓவியங்களும் தீட்டப்பட்டுள்ளன. மொதிரா மைதானமும் அழகுபடுத்தப்பட்டு அங்கும் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அமெரிக்காவின் முதல் குடும்பத்தை வரவேற்க பல ஏற்பாடுகளை மத்திய அரசு செய்துவந்தாலும், இந்திய வெப்பத்தை ட்ரம்ப் தாங்கிக்கொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தற்போது அகமதாபாத்தின் இரவு வெப்பநிலை 17-18 டிகிரி செல்சியஸில் இருக்கும் என்கின்றனர் வானிலை ஆய்வாளர்கள். மேலும் பகல் நேரங்களில் இது 35 -36 டிகிரி செல்சியஸாக இருக்கும். ஆனால் அமெரிக்காவில் வெறும் 17-18 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை மட்டுமே இருக்கும். மிகக் குறைவான வெப்பநிலையில் வாழ்ந்துவரும் ட்ரம்ப், அவரது மனைவிக்கு இது மிகக் கடினமான ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காற்று எப்படி?

அகமதாபாத்தில் ட்ரம்பிற்காக வெப்பமான வானிலை காத்திருக்கிறது என சில இணையவாசிகள் தெரிவித்துவருகின்றனர். மோட்டேரா பகுதியில் காற்று மாசுபாடு மத்திய வேளையில் அதிகமாகக் காணப்படுவதால் ட்ரம்ப், அவரது மனைவிக்கு இது கடினமாக இருக்கப்போவதாகச் சிலர் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க:ட்ரம்ப்புடன் மோடி தாஜ்மஹாலை சுற்றிப்பார்க்க மாட்டார்?

ABOUT THE AUTHOR

...view details