தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

இனி ஹாங்காங் தன்னாட்சி பெற்ற மாகாணம் அல்ல - அமெரிக்கா அறிவிப்பால் அதிர்ச்சி - ஹாங்காங் மீதான சீன அடக்குமுறை

வாஷிங்டன்: ஹாங்காங் மாகாணத்தை இனி தன்னாட்சி பெற்ற பகுதியாக அமெரிக்கா கருதாது என்று அமெரிக்க வெளியுறவுத் துறை செயலர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.

Pompeo
Pompeo

By

Published : May 28, 2020, 12:14 PM IST

ஹாங்காங் 1997ஆம் ஆண்டு பிரிட்டனிலிருந்து சுதந்திரம் பெற்று சீனாவின் ஆளுகைக்கு உள்பட்ட தன்னாட்சி அதிகாரம் பெற்ற பகுதியாக இருந்துவருகிறது. இருப்பினும் ஹாங்காங்கின் தன்னாட்சி அதிகாரத்தை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் சீனா சில சட்டங்களை இயற்றுகிறது. இதை எதிர்த்து ஹாங்காங்கில் மிகப்பெரிய போராட்டங்களும் வெடித்துவருகின்றன.

இந்நிலையில் அமெரிக்க வெளியுறவுத் துறை செயலர் மைக் பாம்பியோ, ஹாங்காங் மாகாணத்தை இனி தன்னாட்சி பெற்ற பகுதியாக ட்ரம்ப் அரசு கருதாது என்று தெரிவித்துள்ளார். மேலும், "1997ஆம் ஆண்டுக்கு முன் அமெரிக்கா விதித்த சட்டங்கள் ஹாங்காங் மாகாணத்தில் அமல்படுத்தப்பட்டதைப் போல, இப்போது அமல்படுத்த ஹாங்காங் விரும்புவதில்லை" என்றார்.

அமெரிக்க வெளியுறவுத் துறை செயலரின் இந்த அறிவிப்பின் மூலம் ஹாங்காங்கிற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தாது. இருப்பினும் ஹாங்காங் மாகாணத்தின் தன்னாட்சி அதிகாரத்தைப் பறிக்கும் வகையில் சீனா செயல்பட்டுவருவதாக அமெரிக்க குற்றஞ்சாட்டிவந்த நிலையில், திடீரென்று அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் இவ்வாறு கூறியிருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, சீன அரசுக்கு எதிராக ஹாங்காங்கில் நடைபெறும் போராட்டங்களை ஒடுக்க வழிவகை செய்யும் மசோதாக்களை அந்நாட்டு அரசு தாக்கல் செய்தது.

சீனா ஒருதலைபட்சமாகவும் தன்னிச்சையாகவும் தனது சட்டங்களை ஹாங்காங்கில் திணிப்பதாக அமெரிக்க கண்டித்தது. மேலும், சீனா தனது சர்வதேச கடமைகளுக்குக் கட்டுப்பட வேண்டும் என்றும் ஹாங்காங்கின் சுயாட்சியை மதிக்க வேண்டும் என்றும் அமெரிக்கா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஜி7 உச்சிமாநாட்டை கேம்ப் டேவிட்டில் நடத்தலாம் - ட்ரம்ப்

ABOUT THE AUTHOR

...view details