தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

'எப்ப சார் வருவாங்க' - புதிய வீரர்களுக்காக காத்திருக்கும் சர்வதேச விண்வெளி நிலைய வீரர்கள் - சர்வதேச விண்வெளி நிலைய திட்ட மேலாளர் கிர்க் ஷைர்மேன்

வாஷிங்டன்: விண்வெளிக்கு விரைவில் பறக்கவிருக்கும் இரண்டு வீரர்களின் வருகைக்காக, சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருக்கும் மூன்று வீரர்களும் காத்திருப்பதாக நாசாவின் சர்வதேச விண்வெளி நிலைய திட்ட மேலாளர் தெரிவித்துள்ளார்.

விண்வெளி
விண்வெளி

By

Published : May 23, 2020, 1:56 PM IST

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள ’ஸ்பேஸ்-எக்ஸ்’ என்கிற தனியார் அமெரிக்க விண்வெளி போக்குவரத்து மையம் உள்ளது. இந்நிறுவனம், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 10 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய ராக்கெட்-ஷிப்பில் இரண்டு வீரர்களை அனுப்பத் திட்டமிட்டுள்ளனர். இந்த ராக்கெட்டானது ஃபுளோரிடாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து, அடுத்த வாரம் செலுத்தப்படவுள்ளது.

இதுகுறித்து சர்வதேச விண்வெளி நிலைய திட்ட மேலாளர் கிர்க் ஷைர்மேன் கூறுகையில், "தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள மூன்று விண்வெளி வீரர்கள் நாசாவின் டக் ஹர்லி, பாப் பெஹன்கென் ஆகிய இரண்டு வீரர்களின் வருகையை எதிர்பார்த்து மிகவும் உற்சாகமாக உள்ளனர்" என்றார்.

மேலும், கென்னடி விண்வெளி மையத்திலிருந்து வரும் மே 27ஆம் தேதி மாலை 4:33 மணிக்கு ராக்கெட் ஏவுதல் செய்யத் தயாராக உள்ளோம் என நாசா இணை நிர்வாகி ஸ்டீவ் ஜுர்சிக் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:10 ஆண்டுகளுக்குப் பிறகு விண்வெளிக்குப் பறக்கும் அமெரிக்க வீரர்கள்!

ABOUT THE AUTHOR

...view details