தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

நீதிபதி சோட்டோமேயரிடம் பதவியேற்கும் கமலா ஹாரிஸ்!

வாஷிங்டன்: துணை அதிபரான கமலா ஹாரிஸூக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதி சோனியா சோட்டோமேயர் பதவி பிரமாணம் செய்து வைக்கவுள்ளார்.

Harris to be sworn in by Justice Sotomayor at inauguration
கமலா

By

Published : Jan 17, 2021, 12:17 PM IST

Updated : Jan 20, 2021, 8:24 AM IST

வரும் ஜனவரி 20ஆம் தேதி நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் பதவியேற்பு நிகழ்ச்சியை உலகமே ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ்துணை அதிபராக பதவியேற்க உள்ளார். அவருக்கு அமெரிக்காவின் உச்ச நீதிமன்ற நீதிபதி சோனியா சோட்டோமேயர் (Sonia Sotomayor) பதவி பிராமணம் செய்து வைக்கவுள்ளார்.

பதவியேற்புக்காக அவர் இரண்டு பைபிள்களை பயன்படுத்துகிறார். அவற்றில் ஒன்று உச்ச நீதிமன்றத்தின் முதல் கறுப்பின நீதிபதியான துர்கூட் மார்ஷலுக்கு(Thurgood Marshall) சொந்தமானது என கூறப்படுகிறது.

பதவியேற்பு விழாவில் இரண்டாவது முறையாக சோட்டோமேயர் கலந்துகொள்ளவுள்ளார். முன்னதாக, அவர் 2013இல் ஜோ பைடனுக்கு துணை அதிபராக பதவி பிரமாணம் செய்துவைத்தது குறிப்பிடத்தக்கது.

Last Updated : Jan 20, 2021, 8:24 AM IST

ABOUT THE AUTHOR

...view details